கிரந்துருகோட்டே வீடொன்றில் சுமார் 900,000 ரூபா பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் 1,900 லீட்டர் டீசல் மற்றும் 19 லீட்டர் பெட்ரோலை பதுக்கி வைத்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் 42 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கிரந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அறந்தலாவ விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அறந்தலாவ முகாமின் கட்டளை அதிகாரி இன்ஸ்பெக்டர் எம்.எம்.கே. பீரிஸ் உள்ளிட்டோர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.