‘பயங்கரவாத அமைப்பு’ என அறிவித்த கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

Date:

” கட்டார் சேரிட்டி” என்ற தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டாரில் இருந்து தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கட்டார் தொண்டு நிறுவன அதிகாரிகளை நேற்று சந்தித்தேன். 2019 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நிதியின் மீதான தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை சட்டமா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படும் தொண்டு நிறுவனத்தின் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அதிகாரிகள் கட்டார் அறக்கட்டளை ஒரு பயங்கரவாத நிறுவனம் என்று பெயரிட்டதுடன் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் முக்கிய வழக்கு தொடர்பாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதேநேரம், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் வழக்கறிஞர்கள், கட்டார் அறக்கட்டளையை பயங்கரவாத அமைப்பாக பெயரிடுவது ஹிஸ்புல்லாவை 2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று கூறியுள்ளனர்.

கட்டார் அறக்கட்டளையானது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஊழியர்களைக் கொண்ட அலுவலகத்தைக் கொண்டுள்ளது.

அத்தோடு, குற்றப்புலனாய்வு பிரிவில் பயங்கரவாத அமைப்பு என்று பெயரிட்ட போதிலும் அவர்களில் எவரும் கைது செய்யப்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற கட்டார் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டதன் பின்னர், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக பொதுபல சேனாவினால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...