காலி கோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் கொள்வனவு செய்ய வந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
‘டோக்கன் பெற்றவர்கள் தமக்கு எரிபொருள் வழங்கும் வரையில் வைத்தியர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ எரிபொருள் எடுக்க அனுமதிக்க மாட்டோம்’ என தெரிவித்து அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை இன்று (01) வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் ஒதுக்கப்பட்டுள்ளது.