அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி:அடுத்த வாரம் நாடு மூடப்படுமா?

Date:

அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை தொடரும் எனவும் அறிய முடிகின்றது.

பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், கடந்த வாரமும் பல அத்தியாவசிய சேவைகள் தடைபட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு நாட்டு விவகாரங்களை வழமையாகப் பேணுவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை அடுத்த வாரம் டீசல் கப்பல் ஒன்றும், அடுத்த வாரம் 22ஆம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு வரும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...