பிராந்திய அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை இன்று முதல் ஆரம்பம்!

Date:

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகளை மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒவ்வொரு பிராந்திய அலுவலகங்களிலும் முன்கூட்டியே பதிவு செய்த 100 பேருக்கு மாத்திரம் இந்தச் சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை www.immigration.gov.lk  ஒப்படைப்பதன் மூலம் தமக்கான நாட்களை ஒதுக்கி கொள்ள முடியும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும், நேரமும் முற்கூட்டியே பதிவு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே அவசர தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லவுள்ள விண்ணப்பதாரிகள், அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை 070 63 11 711 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பிய பின்னர் திகதி வழங்கப்படும்.

அவ்வாறு சமர்பிக்கப்படும் ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்ததன் பின்னரே துரிதமாக நாளொன்றும், நேரமும் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் குருநாகல் மாவட்ட பிராந்திய அலுவலகத்தின் ஊடாக கடவுச்சீட்டு விநியோக ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...