ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிகவும் ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ள ஏரோஃப்ளோட் விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி உரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கு ரஷ்யா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் எரிபொருள் கொள்வனவுக்கான கடன் வசதியை வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
1/2
Had a very productive telecon with the #Russia President, Vladimir Putin. While thanking him for all the support extended by his gvt to overcome the challenges of the past, I requested an offer of credit support to import fuel to #lka in defeating the current econ challenges.— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 6, 2022