இம்முறை அரபா தின தொழுகை மற்றும் உரையை ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் பின் கரீம் அல் ஈஸா அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.
சவூதி அரேபியாவின் முன்னாள் நீதி அமைச்சரான ஷேக் அவர்கள் மூத்தறிஞர் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களுல் ஒருவரும், முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளரும் ஆவார்.
உலகின் பிரதான மொழிகளில் குறித்த உரை நேரடியாக மொழியாக்கம் செய்யப்படுவதோடு, இம்முறை தமிழ் மொழி மூலமும் மொழியாக்கம் செய்யப்படவுள்ளது.
வழமைப்போன்று இம்முறையும் புனித அரபா தின நிகழ்வுகள் தொடர்பான நேரலை இலங்கை நேத்ரா தொலைக்காட்சியும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.