இன்று முதல் கொழும்பிற்கு எரிவாயு விநியோகம்: இன்று நாட்டுக்கு மற்றுமொரு எரிவாயு கப்பல்!

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகம் ஜூலை 11 திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது. புதிய விலை இப்போது 4910ரூபாவாகும்.

மேலும், மற்ற பகுதிகளுக்கு ஜூலை 13ஆம் திகதி எரிவாயு விநியோகம் செய்யப்படும்.

இதேவேளை பொதுமக்கள் சிலிண்டர்களை பதுக்கி வைப்பதில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் லிட்ரோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை மே மாதத்திற்கான மின்சார கட்டண பத்திரத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நேற்று  வந்தடைந்தது. அதன்படி நேற்று பிற்பகல் முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...