விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை இலங்கை விமானப்படை மறுத்துள்ளது.
அதற்கமைய இந்த விடயம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் தர்மபால சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்தி பொய்யானது என விமானப்படை ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் முன்னாள் அஜித் தர்மபாலவின் வெளிப்படுத்தல் விமானப்படைக்கும் விமானப்படைத் தளபதிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியாகும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இது பொதுமக்களின் கோபத்தை இலங்கை விமானப்படை மீது திருப்பும் முயற்சி என்றும் விமானப்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.