ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்  விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகை இன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, த ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று 4 தடவைகள் ஜனாதிபதி உட்பட 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாக பிரான்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாளை பதவி விலகுவதாக சபாநாயகரிடம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை சபாநாயகர் அறிவிப்பார் என ஜனாதிபதி செயலகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதேவேளை, வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மக்களதும் அதிகாரிகளினதும் கடும் எதிர்ப்பு காரணமாக இன்று அதிகாலை அங்கிருந்து திரும்பிச்செல்ல நேரிட்டது.

விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஸ சென்ற போது, அங்கிருந்த பெருந்திரளான பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு அவரது தோல்வியுற்ற பதிலை எதிர்த்து, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்,   பல மாதங்களாக நீடித்த போராட்டங்கள் அதிகரித்தன.

சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...