நேர்மையான மனிதரின் மதிப்பு பற்றி எதிர்காலத்தில் நிச்சயம் பேசப்படும்: பொதுஜன முன்னணி அறிக்கை

Date:

இலங்கையின் 08வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தனது குறுகிய காலத்தில் ஆற்றிய சேவைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி நன்றி செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் குறித்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி ஆகியவை அவர் முன்கூட்டியே இராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணங்கள் என்று சுட்டிக்காட்டுகிறது.

முப்பது வருடகால பயங்கரமான, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தாய் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்.

ஜனாதிபதியாக பதவியேற்று மூன்று மாதங்களிலேயே  தொற்று நெருக்கடி ஏற்பட்டது.

கொவிட் அனர்த்தத்தை இலங்கை ஜனாதிபதி சரியான முறையில் நிர்வகித்துள்ளார் என்பதை சர்வதேச சமூகம் கூட ஏற்றுக்கொண்டுள்ளது.

உங்களைப் போன்ற ஒரு நேர்மையான மனிதரின் மதிப்பு பற்றிய உரையாடல் வருங்கால குடிமக்களின் மனசாட்சியில் நிச்சயம் உருவாகும் எனவும் பயங்கரமான போர்க்களத்தில் ஒரு போர் வீரனாகவும், அரச பாதுகாப்புச் செயலாளராகவும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவராகவும் உங்களின் சேவைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் எனவும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...

நிலவும் வரண்ட வானிலை நாளை முதல் மாற்றமடையும்

நாட்டில் தற்போது நிலவும் வரண்ட வானிலை நாளை (23) வெள்ளிக்கிழமையிலிருந்து மாற்றமடையும் என...

கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும்: ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள்...