குருந்தூர்மலை தமிழர் கோயில் நிலத்தில் உள்ள சட்டவிரோத பௌத்த விகாரையை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

Date:

குருந்தூர்மலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து விகாரைகள், சிலைகள் மற்றும் கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஐயனார் கோயிலில் தமிழர்கள் தொடர்ந்து வழிபடலாம். அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றத்தில் புகார் அளிக்கவும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

மலையை மாற்றுவதற்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவு இருந்து வந்த போதிலும், சிங்கள பௌத்த பிக்குகள்  இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் கோவில் வளாகத்தில் ஒரு பௌத்த விகாரையை நிர்மாணித்தனர்.

கடந்த மாதம் விகாரையில் புத்தர் சிலை அமைப்பதை இலங்கை இராணுவம் மற்றும் சிங்கள பௌத்த பிக்குகளுக்கு உள்ளூர் தமிழர்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜூலை 14, வியாழன் அன்று, இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

​​முல்லைத்தீவு நீதவான் நீதிபதி ஆர்.சரவணராஜா, பௌத்த விகாரை மற்றும் புதிய சிலைகள் உட்பட அனைத்து புதிய கட்டுமானங்களையும் மலையிலிருந்து கீழே இறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அத்துமீறல் கட்டமைப்பை அகற்றியதன் பின்னர், முல்லைத்தீவுப் பொலிஸாருக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறும், பிரதேசத்தின் அமைதியைப் பாதுகாக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

ஐயனார் கோவிலுக்குள் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும், வழக்கம் போல் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி சரவணராஜாவும் தீர்ப்பளித்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான தமிழ் வழக்கறிஞர் வி.எஸ்.தனஞ்செயன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...