ஜூலை 09 ஆம் திகதி மக்கள் எழுச்சியின் பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்று உறுதிப்படுத்தப்பட்ட முறையில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது, தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி, சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை இறுதி வரை தென்கிழக்கு ஆசிய தேசத்தில் தங்கியிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, ஆகஸ்ட் மாதத்திற்குள் ஜெட்டாவுக்குச் செல்வார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் திட்டத்தையும் கைவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாய் நாட்டிற்கு தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய நாடு திரும்பியதும், முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகப் பூர்வ இல்லம், ஓய்வூதியம் மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.