ஜனாதிபதித்தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் ஆரம்பமானது.
இந்நிலையில் நாடு மட்டுமல்லாது முழு உலகமும் இன்று இலங்கை பாராளுமன்ற நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருப்பதால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னுதாரணமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மேலும் கூறியதாவது:
எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று என்றே கூற வேண்டும். இந்த விசேட சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் மட்டுமல்ல, முழு நாடும் மற்றும் முழு உலகமும் இன்று பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதில் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.
இதன்போது, வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு வருவதைத் தவிர்ப்பதற்கோ அல்லது கைத்தொலைபேசி கையில் இருந்தால் அதனைக் கொடுப்பதற்கோ இரண்டு அதிகாரிகள் இருதரப்பிலும் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளேன்.
ஒருவரின் வாக்கு அல்லது வாக்குச் சீட்டை வெளிப்படுத்துவது அல்லது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி புகைப்படம் எடுப்பது அரசாங்கத்தின் அரசியலமைப்பின் படி எமக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிக்கு எதிரானது என்றே கூற வேண்டும்.