யாழ்.பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின்‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு!

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடம் நடாத்தும் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு இம்மாதம் (ஜூலை) 29 ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்’ என்னும் கருப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டுத் தொடரின் ஒருபகுதியாகக் கலைப்பீடம் இந்த மாநாட்டை ஒழுங்கமைத்துள்ளது.

இது தொடர்பாக, ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாட்டின் அமைப்புக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் தற்போதைய நிலைமையை அது ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டு கால வரலாற்றின் வெளிச்சத்தில் இருந்து அணுகுவுதற்கும், விளங்குவதற்குமான ஒரு முயற்சியாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் சர்வதேச ஆய்வு மாநாடு 2022 (Jaffna University International Research Conference 2022 (JUICE 2022)) இன் ஒரு துணை மாநாடாகவும், ‘மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் நூற்றாண்டு: தொடர்ச்சிகள், விலகல்கள், செல்நெறிகள்’ என்ற கருப்பொருளிலே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம், ‘மானுடம் ஆராய்ச்சி மாநாடு -2022’ இனை இம்மாதம் 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

நாடு ஒரு பெருந்தொற்றுநோயின் பிடியிலும், நாட்டினுடைய கல்வி உட்பட பல்வேறு துறைகள் பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடிகளிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு சூழலிலே, இலங்கையில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின் மூன்றாம் நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்டதன் நூறு ஆண்டுகளின் (1921 – 2021) பூர்த்தி இடம்பெற்றிருக்கிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29ஆம் திகதி) மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகும் .

இந்த நிகழ்வுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

மாநாட்டின் பிரதான ஒழுங்கமைப்பாளர் கலாநிதி ரி.சனாதனன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர், ஆய்வு மாநாட்டின் பிரதம ஆசிரியர் கலாநிதி எம். திருவரங்கன் ஆகியோரும் கலந்துகொள்வார்.

மாநாட்டின் முக்கிய உரைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் முதலாவது பீடாதிபதியான வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கே. இந்திரபாலா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மனிதப் பண்பியற் கற்கைகள் முதற் பத்தாண்டுகள் (1974 – 1984) என்னும் தலைப்பிலும், இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுஜித் சிவசுந்தரம் ‘இலங்கையில் மானுடர்களும் சூழல்களும்’ என்னும் தலைப்பிலும் நிகழ்த்தவுள்ளனர்.

நன்றியுரையினை மாநாட்டின் செயலாளர் அபிராமி ராஜ்குமார் நிகழ்த்துவார்.

தொடர்ந்து, மாநாட்டின் பிரதான நிகழ்வுகளான குழுநிலைக் கலந்துரையாடல்களும் ஆய்வுக் கட்டுரை அமர்வுகளும் அடுத்த நாள் சனிக்கிழமை (30ஆம் திகதி) முழுநாள் அமர்வுகளாக இடம்பெறவுள்ளன.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...