‘கொவிட்’ அறிகுறி உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாதீர்கள்’: தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்!

Date:

‘கொவிட்’ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ‘கொவிட்’ தடுப்பூசியைப் பெறுவதில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்பு ‘கொவிட்’ தடுப்பு ஊசி போடப்பட்ட பகுதிகள், வட்டார சுகாதார மருத்துவர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் வந்து செல்கின்றனர்.

இன்று (27) காலை முதல் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள இராணுவத்தினரால் நடத்தப்படும் ‘கொவிட்’ தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள பெருமளவிலான மக்கள் வருகைத் தந்தனர்.

இதேவேளை ‘கொவிட்’ அறிகுறிகளைக் காட்டும் குழந்தைகளை பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

சில காலத்தின் பின்னர் பாடசாலைகள் திறக்கப்படுவதால், அதனைத் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் ‘கொவிட்’ பரிசோதனை செய்யப்படாது என்றும் நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...