அவசரகாலச் சட்டம்: ‘ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்’

Date:

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என அதன் ஸ்தாபகத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அது இலங்கைக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்கவும் வழிவகுக்கும் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலவரப்படி மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க தற்போதுள்ள பொதுச் சட்டமே போதுமானது எனவும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...