ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அரச பாடசாலை பேருந்து சேவை!

Date:

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி, முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தை இலக்கு வைத்து இந்த பஸ் சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக சுமார் நாற்பது பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  திலன் மிராண்டா தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடம் இருந்து சாதாரண பஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

இந்தப் பேருந்தின் ஆரம்பப் புள்ளி மற்றும் செல்லும் இடங்கள் குறித்த துண்டுப் பிரசுரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான தகவல்களை 1955 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...