தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தமது கட்சி அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் இணையும் இந்த கோரிக்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு சகல அரசியல் கட்சிகளையும் கோரியிருந்தார். இதனையடுத்து அவர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார்.