சவூதி அரேபியா சனிக்கிழமையன்று காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் பல பாலஸ்தீனியர்களைக் கொன்றதற்கு சவூதி அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பாலஸ்தீன மக்களுக்கு சவூதி அரேபியா துணை நிற்கும் என்றும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகரிப்பை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகம் தனது பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், சவூதி அரேபியா குடிமக்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் இந்த நீடித்த மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது..
வெள்ளிக்கிழமை முதல் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் ஆக்கிரமிப்பில் 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததைத் தவிர, பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் காசா பகுதியின் தனித்தனி பகுதிகளில் பல ஏவுகணை தாக்குதல்களை நடத்தி பல வீடுகளை தரைமட்டமாக்கின.
வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வயதான பாலஸ்தீன பெண் ஒருவர் வீரமரணம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் ஹனூன் சோதனைச் சாவடி அருகே, மணப்பெண்ணை அவரது கணவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது பொதுமக்கள் வாகனம் ஒன்று குறிவைக்கப்பட்டதில் பலர் காயமடைந்தனர்.
கூடுதலாக, தெற்கு காசா பகுதியில் கான் யூனிஸில் உள்ள அல்-சனா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சைத் தொடர்ந்து இரண்டு பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வாழ்வழித் தாக்குதலில் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் மற்றொரு தளபதி கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.