கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த தோட்ட வேலைத்திட்டம்!

Date:

தேசிய சமாதான சபை மற்றும் ரம்ய லங்கா அமைப்பு ஆகியவை கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தோட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய கேகாலை, வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் இயங்குகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 300 பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஐந்து மாவட்டங்களில் உள்ள 1500 பயனாளர்களுக்கு விதைகள் மற்றும் உரம் உரங்கள் இலவசமாக விநியோகிக்கப்படும்.

அதேநேரம், ஐந்து மாவட்டங்களில் ஐந்து குழு பண்ணைகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிலம் தற்காலிகமாக மத ஸ்தலங்கள் மற்றும் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்களால் வழங்கப்படும்.

மாவட்ட சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு அந்தந்தப் பிரதேச செயலாளர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக ரம்ய லங்கா நிறுவனம், கேகாலை மாவட்ட சர்வமதக் குழு மற்றும் கேகாலை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கடநத 8 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியிருந்தது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...