களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகளில் தொட்டவத்தை அல்- பஹ்ரியா சாதனை

Date:

களுத்துறை மாவட்ட மட்டத்திலான பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகளில் தொட்டவத்தை அல்- பஹ்ரியா தேசிய பாடசாலை விசேட சாதனை படைத்துள்ளது.

அதற்கமைய, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கு கீழ் நடந்த உதைபந்தாட்ட போட்டிகளில் தொட்டவத்தை அல்-பஹ்ரியா  பாடசாலை அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட சாம்பியன் பட்டத்தை சூடிக் கொண்டதுடன், மாகாண மட்ட போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ளது.

மேலும் பாடசாலையின் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட அணி கால் இறுதி போட்டி வரை முன்னேறியது. இருப்பினும் கடும் போட்டிகளுக்கு மத்தியில் அரை இறுதி வாய்ப்பினை தவறவிட்டது.

இதேவேளை பாடசாலையின் சகல வயதுகளுக்கு கீழ்ப்பட்ட அணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இதற்காக பங்களித்த அதிபர், ஆசிரியர்கள், அணியின் பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், பழைய மாணவிகள் சங்கம், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் சகலருக்கும் அல்- பஹ்ரியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...