அடுத்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4, அன்று இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நினைவேந்தலின் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கும் வழிநடத்துவதற்கும் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான பிரேரணை பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது.