முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் வந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 12ஆம் திகதி அழைக்கப்பட்ட போது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு உதயங்க வீரதுங்கவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.