தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்துகின்றது.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரணில்-ராஜபக்ஷ இராணுவ ஆட்சிக்கு எதிராக மாணவர்கள்கள் சம்மேளனம் போராட்டம் நடத்துகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துதல், ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரையும் விடுவித்தல், அத்துடன் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் போன்றவற்றையும் முன்னிறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.