புதிய அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 09 மனுக்கள்!

Date:

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட ஒன்பது பேரால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் தற்போதைய அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது என அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும், வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானம் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளன.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...