பல அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம்: ஜனாதிபதி

Date:

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய விமான சேவை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய நிறுவனங்களை தனியார் மயமாக்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

‘தி எகனாமிஸ்ட்டுக்கு’ வழங்கிய நேர்காணலிலொன்றின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் எனவும், இலங்கை முதலீட்டுக்குத் திறந்துள்ளதாகத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், சில நிறுவனங்கள் 40 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருவதால், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்துரையாடப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை சில அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களின் விரோதப் போக்கு குறித்து வினவியபோது, ​​தொழிற்சங்கங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை, மக்கள்தான் முக்கியம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என மக்கள் நினைத்தால் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...