அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பாதிப்பினால் நாவலப்பிட்டிய பிரதேசம் மிக மோசமாக பாதிப்படைந்தது யாவரும் அறிந்த விடயமே.
இந்தப் பாதிப்பின் காரணமாக அப்பகுதி வாழ் மக்கள் உடமைகளை இழந்து, உயிர்ச் சேதங்களுக்கு ஆளாகி, தம்முடைய வாழ்விடங்களை இழந்து வாழ்வாதாரங்களுக்கு கஷ்டப்படக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கான பல்வேறு மனிதாபிமான உதவிகளை அப்பகுதி வாழ் மக்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த அமைப்புக்களும், பள்ளிவாயல்களும், முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாத சமூகங்களும் உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த உதவிகளின் வரிசையில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த தனவந்தர்களும், பிரஉபகாரிகளும் இணைந்து எடுத்த முயற்சியின் விளைவாக 949,204.00 ரூபாய் தொகையை அவர்கள் சேகரித்து நேற்று நாவலப்பிட்டிய பகுதிக்குச் சென்று அவர்கள் நேரில் கையளித்து இருக்கின்றார்கள்.
இத்தகைய இந்த மனிதாபிமான, சகோதரத்துவ உதவிகளை மேற்கொண்ட இந்த சகோதரர்களுக்கும், நாட்டின் ஏனைய பகுதிகளை சேர்ந்த தனவந்தர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நாம் அனைவரும் நன்றி பாராட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.