ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக இலங்கை சர்வதேச சமூகத்தின் முன் பெரும் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஊடக அறிக்கையிடல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குடிமக்கள் சட்டத்தை கையில் எடுப்பது குறித்தும் பாதுகாப்புச் செயலாளர் தனது கருத்தை தெரிவித்தார்.
எந்தவொரு நபரோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.