இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானம்!

Date:

இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இவ்வாறான இக்கட்டான காலங்களில் இலங்கையுடன் இணைந்து நிற்கின்றது எனவும் அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலியா 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவி நிதியாக இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இந்த புதிய நிதி நன்கொடையின் மூலம், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியின் அளவு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...