பேருவளை ஜாமிஆ நளீமிய்யா உயர் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்றாகும்!

Date:

கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மகத்தான கல்விப் பணி ஆற்றி வரும் முன்னணி கல்வி நிறுவனமான இலங்கையின் பேருவளையில் அமைந்துள்ள ஜாமிஆ நளீமிய்யா உயர் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்றாகும்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் மிகப் பாரிய பங்களிப்புக்களை செய்து வருகின்ற பேருவளையில் ஜாமிஆ நளீமிய்யா உயர்கலாபீடம் ஆகஸ்ட் 19 இதே போன்றதொரு தினத்தில் 1973ஆம் ஆண்டு பேருவளையில் அரம்பிக்கப்பட்டது.

கொடைவள்ளல் எம்.ஐ.எம்.நளீம், அர்களுடைய முழுமையான பொருளாதார பங்களிப்பில் அரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இலங்கை மட்டுமல்லாமல் சர்வதேச மட்டத்ததிலும் புகழ்பெற்ற நிறுவனமாக இது மிளிர்ந்திருக்கின்றது.

இங்கு படித்து வெளியாகிய பட்டதாரிகள் பல்வேறு துறைசார் நிபுணர்களாக வளர்ச்சியடைந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தா சார்ந்த சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் பங்களிப்ப செய்து வருகின்றமை மிக முக்கியமான அம்சமாகும்.

விரைவுரையாளரகளாக, இராஜதந்திரிகளாக, திணைக்கள தலைவர்களாக, அதிபர் ஆசிரியர்களாக, கல்வித்துறை ஆலோசகர்கர்களாக, சட்டத்தரணிகளாக, நிபுணத்துவம் வாய்ந்த துறைசார் நிபுணர்களாக  பல்வேறு துறைகளில் பரிணாமம் பெற்று விளங்குகின்ற கல்லூரியின் வார்ப்புக்கள் இந்நாட்டுக்கு கிடைத்த வரப் பிரசாதமாகும்.

அந்நிறுவனத்தின் புதிய தலைவராக முதல்வராக அந்த நிறுவனத்திலேயே கல்வி கற்று வெளியேறி நீண்டகாலம் பணியாற்றிய அஷ்ஷேக் ஏ.சி அகார் முகம்மது சில தினங்களுக்கு முன்னால் நியமிக்கப்பட்டதும் இக்காலப்பகுதியில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த இக்கலாபீடம் தொடக்க காலம் முதலே சமகால உலகுக்கு இயைபான வகையிலான பரந்த கல்வித் திட்டமொன்றினைக் கொண்டிருந்தது.

அந்த வகையில், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மரபார்ந்த கல்விச் சட்டகத்தினுள் நவீன கல்வியை உள்ளீர்த்து முழுமையான இஸ்லாமியக் கல்வி முறையொன்றை முன்வைக்கும் வரலாற்றுத் தேவையை அது பூர்த்தி செய்தது.

அதன் பட்டதாரிகள் இலங்கையின் பல்லின சமூகங்களின் வேறுபட்ட கலாசாரப் பெறுமானங்களை மதிக்கும் பரந்த மனப்பான்மையையும் மனித நேயத்தையும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளையும் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றனர்.

எனவே இலங்கை திருநாட்டுக்கும் சமூகத்திற்கும் தொடர்ச்சியாக இதுபோன்று பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு நிறுவனமாக தொடரட்டும் என ‘நியூஸ் நவ்’ வாழ்த்துகின்றது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...