வசந்த முதலிகே உட்பட மூவர் சார்பாக 3 அடிப்படை உரிமை மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றில்…!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவருக்கும் சார்பாக 03 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் நாளை சமர்பிக்க அவர்களது சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்களுக்கு சார்பாக நீதிமன்றத்தின் மூலம் ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்படுவதாக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.

மேலும் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நியாயமற்ற செயல் எனவும் சட்டத்தரணி நுவான் போபகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, போராட்டக்காரர்களை கைது செய்வதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...