அமெரிக்க தூதரகம் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.
பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு பொருட்களை நகர்த்துவதுடன் அமெரிக்க-இலங்கை வரலாற்றையும் அற்புதமாகக் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.
எமது பல தசாப்தங்கள் பழமையான அலுவலகங்களில் இருந்து, இலங்கையின் பல தசாப்த கால அமெரிக்க வரலாறு பொதிந்து எமது புதிய தூதரக கட்டிடத்திற்கு நகர ஆரம்பிக்கும்.
இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். விரைவில் எங்களின் புதிய இடத்திற்கு உங்களை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
It has been an “all hands on deck” experience this week as we pack up decades of US-SL history from our old offices and begin to move into our new Embassy building. Excited to welcome you to our new space soon. pic.twitter.com/OcbJjNJfIN
— Ambassador Julie Chung (@USAmbSL) August 24, 2022