ஐக்கிய மக்கள் சக்தியில் ரஞ்சனுக்கு புதிய பதவிகள்!

Date:

ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டு புதிய பதவிகளைப் பெறுவார் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகஸ்ட் 27, சனிக்கிழமையன்று ட்விட்டரில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, ரஞ்சன் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

கூடுதலாக, ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு முயற்சியை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்படும் எனவும் பதிவிட்டிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்று கடந்த வெள்ளிக்கிழமை ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டார்.

2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...