எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

Date:

டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் இருப்புகளையும் தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்குத் தேவையான கையிருப்பு தற்போது இலங்கை கனியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக கூட்டுத்தாபனம் கூறுகிறது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் களஞ்சியசாலைகளில் போதிய எரிபொருள் இருப்புக்கள் உள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் எரிபொருள் இல்லை என பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் எனவும் இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கூற்றுப்படி, நாட்டில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தேவைக்கு இடையூறு இன்றி போதுமான அளவு விநியோகம் உள்ளது எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என  பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...