கடன் விவகாரம் குறித்து விவாதிக்க இலங்கையின் அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்று கூடுவது முக்கியம் என்று ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், டோக்கியோ இந்த விஷயத்தில் மற்ற கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைக்கும் என்றும் கூறினார்.
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் ராய்ட்டர்ஸிடம், இருதரப்புக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை இலங்கை கேட்கும் என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக செவ்வாய்கிழமை, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, அவ்வாறான ஒரு சந்திப்பை நடத்துவதற்கு எந்த செயற்பாடும் இலங்கையுடன் நடைபெறவில்லை’ என்று ஹயாஷி ஒரு வழக்கமான செய்தி மாநாட்டில் கூறினார்.