கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தாய்லாந்திலிருந்து நாளைய தினம் (செப் – 02) நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஸ, நாடு திரும்பும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சிறப்புரிமைகளும் வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ கடந்த மாதம் 24ம் திகதி நாடு திரும்பவிருந்ததாக அவரது உறவினரும், ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.

எனினும், சில காரணங்களினால் அவரது பயணம் பிற்போடப்பட்டதாகவும், செப்டம்பர் மாதத்தில் அவர் நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...

மிருகக்காட்சிசாலைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல தேசியப் பூங்காக்களை மீண்டும்...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம் வழங்கி வைப்பு!

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்...