மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்!

Date:

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதுடன், சுகாதாரத் துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலையேற்றம் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை நிவர்த்தி செய்வதற்கான அவசர முறைமை தேவை என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

மேலும், உலக வங்கியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் மருந்துகள் உட்பட சுகாதாரத் துறையில் மற்ற தேவைகள் பற்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு, மருத்துவ விநியோகப் பிரிவு, அரச மருந்து ஒழுங்குமுறைக் கூட்டுத்தாபனம், அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் உள்ள குறைபாடுகளை சம்பந்தப்பட்ட குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது.

எனவே, சுகாதார அமைச்சினால் ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமித்து மாதாந்த முன்னேற்ற மீளாய்வைப் பெறுமாறும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மருந்துகளுக்கான செலவில் கிட்டத்தட்ட 40வீத புற்றுநோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

புற்று நோயாளர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களுடன் இன்சுலின் தட்டுப்பாடும் காணப்படுவதாகவும், இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...