பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு: ஜனாதிபதி ரணில் பாகிஸ்தானுக்கு தேவையான ஆதரவு வழங்குவதாக உறுதி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாகிஸ்தானுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட பரவலான அழிவுகளுக்கு அனுதாபங்களை தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, உயிர் இழப்புகளுக்கு பிரதமர் ஷெரீப்பிற்கு இரங்கல் தெரிவித்தார்.

எதிர்பாராத இயற்கைப் பேரிடரை எதிர்கொண்ட பாகிஸ்தான் அரசுக்கும் மக்களுக்கும் அவர் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த சோதனைக் காலங்களில் இலங்கை ஜனாதிபதியின் கருணை மற்றும் ஆதரவை வெளிப்படுத்தியமைக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் நன்றி தெரிவித்ததோடு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பாகிஸ்தானில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பாரிய அழிவுகள் குறித்தும் அவருக்கு விளக்கமளித்தார்.

வெள்ளத்தால் மனித உயிர்கள், வாழ்வாதாரங்கள், கால்நடைகள், பயிர்கள், சொத்துக்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.

பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்கள் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை அளிக்கக்கூடிய நிவாரண நிதியை ஸ்தாபித்தல் உட்பட அரசாங்கத்தின் நன்கு ஒருங்கிணைந்த மனிதாபிமானப் பதிலுக்கும் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டினார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...