கொழும்பில் மிகப்பெரிய கட்டிடங்களை கட்டும் நிறுவனம் ஒரு சதத்தை கூட வருமான வரித்துறைக்கு செலுத்துவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு வரி சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு நிறுவனம் பத்து கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.