இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார்.
இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக்கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
ஜனாதிபதி 17 அல்லது 18 ஆம் திகதி கிரேட் பிரிட்டனுக்கு செல்லவுள்ளார். எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் பிரித்தானிய மக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் 19ஆம் திகதி இலங்கையில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
1952 மற்றும் 1972 க்கு இடையில், ராணி இரண்டாம் எலிசபெத் காமன்வெல்த் தலைவராகவும் இலங்கை ராணியாகவும் இருந்தார்.