ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து வீரர்களை ஏற்றிச் செல்லும் கார்களின் அணிவகுப்பு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இரண்டு விசேட பேரூந்துகளில் கொழும்புக்கு வரும் இரு அணிகளின் விளையாட்டு வீராங்கனைகளுக்கு வீதியின் இருபுறமும் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இரு கிரிக்கட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் இன்று இலங்கை வந்தடைந்தன.
மலையகம், மற்றும் இந்திய பறை இசை மற்றும் நடனங்களுக்கு மத்தியில் விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
📸 Snapshots from the #AsiaCup victory parade
#RoaringForGlory pic.twitter.com/ZGIEov8OxL— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 13, 2022