கம்பஹா மாவட்ட முஸ்லிம் பெண்கள் பாடசாலைக்கான மூன்று மாடிக் கட்டடம் இன்று மாணவர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது!

Date:

கம்பஹா மாவட்டத்தின் ஒரே ஒரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையான கம்பஹா மாவட்டம் அத்தனகல்லை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்துக்கென பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் அவர்களுடைய பூரண நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டடம் இன்று மாணவர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

பாடசாலையின் தற்போதைய அதிபர் சர்ஜுன் சம்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கம்பஹா வலயக்கல்வி பணிப்பாளர், அத்தகனகல்லை கோட்டக் கல்விப் பிரதிப் பணிப்பாளர் உட்பட பல பிரமுகர்கள், கல்விமான்கள், சமூக சேவகர்களுடன் ஏராளமான பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

1945 இல் அரசினர் முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வித்தியாலயம் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பது மறுக்கப்பட்ட வந்த ஒரு சூழ்நிலையில் 1950 களில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யுபண்டாரநாயக்கவின் கரங்களால் அன்றைய முஸ்லிம் தலைவர்களான சேர் ராசிக் பரீட் உட்பட பல பிரமுகர்களின் கலந்து கொள்ளலுடன் திறந்து வைக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டிலிலிருந்து பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் 06 ஆம் தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக உயர் தர வகுப்புக்கள் நடைபெறும் அளவில் பாடசாலை தற்போது வளர்ச்சியடைந்து கம்பஹா மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக மிளிர்கின்றது.

இதனுடைய வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தனவந்தர் அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் அவர்கள் இந்த பாடசாலைக்கு தேவையான 3 மாடிக் கட்டடத்தை கணனிக்கூடம், கேட்போர் கூடம், வாசிகசாலை, விஞ்ஞான ஆய்வு கூடம், உள்ளக விளையாட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைத்து கொடுத்திருப்பது இப்பாடசாலைக்கு கிடைத்த மிகப்பெரிய வரமாகும்.

இன்று நடைபெற்ற புது மாடிக்கட்டட திறப்பு விழாவில் விசேட அதிதிகளாக கம்பஹா வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அனுர பிரேமலால் மற்றும் ஏ. ட்டீ. ஜே குரூப் ஒப் கம்பனியின் செயற்திட்ட முகாமையாளர் ஜமால் ஆப்தீன் அவர்களும் கலந்துகொண்டனர்.

கௌரவ அதிதிகளாக கம்பஹா மாவட்ட வலயக் கல்வி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.டபிள்யு. எம்.என்.பி அனுர குமார, நிர்வாகப் பணிப்பாளர் டபிள்யு.எல். அஜித் விஜேசுந்தர, கம்பஹா தமிழ் மொழி பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.டி.எம். தௌசீர், அத்தனகல்ல கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.எல். ஜி.எல். பிரியங்கனி ஆகியோருடன் ஏ.ட்டீ.ஜே குழுமத்தினரின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...