ஜனாதிபதி ரணிலின் கடிதம் ஐக்கிய அரபு இராச்சிய அதிபரிடம் கையளிப்பு: அமைச்சர் நஸீர் அஹமட்!

Date:

ஜனாதிபதியின் விஷேட தூதுவராக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட், ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிபருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுதிய விஷேட கடிதத்தை கையளித்தார்.

அந்நாட்டின் வௌிநாட்டு அமைச்சரும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான மாட்சிமை மிகு அப்துல் பின் ஷெய்யத் அல் நஹ்யானிடம் அக்கடிதம் கையளிக்கப்பட்டது. இரு நாடுகளின் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அபுதாபியில் இடம்பெற்ற சந்திப்பில் பல தரப்பு விடயங்கள் குறித்து அமைச்சர் நஸீர் அஹமட்டும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிநாட்டு அமைச்சரும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில், இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து அமைச்சர் நஸீர் அஹமட் விளக்கினார். அத்துடன் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து விளக்கிய அமைச்சர், அதற்கான தீர்வுகள் குறித்தும் எடுத்துரைத்து ஐக்கிய அரபு ராச்சியத்தின் உதவிகளை பெறுவது தொடர்பில் அக்கறை செலுத்துமாறும் கோரினார். பிராந்திய மற்றும் சர்வதேசத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புக்களுடன் பல்துறைகளில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை, இவ்வாறான விடயங்களுக்கு ஒத்துழைப்பதில் இலங்கைக்குள்ள ஆர்வங்களையும் அமைச்சர் விளக்கியமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைப் பிரதித்தூதுவர் மேதாவி பீரிஸும் கலந்துகொண்டார்.

இச்சந்திப்புக்கள் இலங்கைக்கு சாதகமான பலன்களை தரக்கூடிய வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...