தமிழ் நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் காயல் மகபூப் 50 ஆண்டு காலம் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழ்ச்சமுதாய உயர்வுக்காக பாரிய பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு தமிழ் இலக்கிய விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள சிம்சன் ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற இன்டர்நேஷ்னல் ஸ்டார் புக் ரிக்கார்ட்ஸ் விழாவில் ‘ஸ்ரீ ருத்ரக் ஷா’ கலை நடன பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அரவிந்த் குமார் இந்த விருதை வழங்கி வைத்தார்.
இவ்விழாவில் பேராசிரியை முகம்மது பாத்திமாவுக்கு மதிப்புறு முனைவர் ( டாக்டர் ) பட்டம் வழங்கப்பட்டது.
பிராமண சமுதாயத்தை சேர்ந்த இவர் இஸ்லாத்தில் இணைந்து 1991ல் திருப்பூர் சையத் மஹபூபை மணமுடித்து 6 பட்டங்களை வென்று கல்விச் சேவையாற்றி வருகிறார்.
மேலும், இவ்விழாவில் மேலும் நால்வருக்கு இன்டர் நேஷனல் ஸ்டார் விருதுகளும் ஆசிரியப் பெருமக்கள் 24 பேருக்கு சிறந்த ஆசிரியர் விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.