பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களுக்கான வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க, சுகாதாரப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சானிட்டரி நாப்கின்களின் விலையை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
துறைமுகம் மற்றும் விமான சேவை வரிகள், சுங்க கட்டணம், மற்றும் செஸ் வரிகள் குறைக்கப்படும் போது, விற்பனையாளர்கள் சானிட்டரி நாப்கின்களை விற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
சுகாதார துவாய்கள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் 150 ரூபாவிற்கு சுகாதார துவாய்களை வழங்க இலங்கை உற்பத்தியாளர் இணங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது அதற்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு வெளியிட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.