10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 குழந்தைகளின் தாய் முதலிடம்!

Date:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள  ஆவூரா கிராமத்தில் சப்ரினா காலிக் என்ற பெண்  வசித்து வருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் சப்ரினா காலிக்  பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பிலேயே தனது  படிப்பை கைவிட்டார்.

இதனையடுத்து மீண்டும் சப்ரினா காலிக் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார்.

இந்த தேர்வு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியானது. அதில் சப்ரினா காலிக் 500-க்கு 467 மதிப்பெண்களை பெற்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதலிடத்தை பெற்றார்.

மேலும் கணிதம், உருது, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஏ1  சித்தி பெற்றுள்ளார்.

இது குறித்து சப்ரினா காலிக் கூறியதாவது, எனது படிப்பை திருமணத்தின் காரணமாக நான் கைவிட்டு விட்டேன். இதனையடுத்து மீண்டும் கடந்த ஆண்டு நான் எனது படிப்பை தொடர தீர்மானித்தேன்.

மேலும் வீட்டு வேலைகளை செய்து கொண்டு, குழந்தைகளை கவனித்துக் கொண்டும் படிக்க ஆரம்பித்தேன். அது எனக்கு மிகவும் கடினமானதாக தான் இருந்தது.

ஆனால் எனது சகோதரிகள்,  கணவர் என அனைவரும் ஆதரவாக இருந்தனர். மேலும் சில நாட்களில் இரவு முழுவதும் படித்துள்ளேன்.

இதனையடுத்து தேர்வுக்கு தயாராக தினமும் 2 மணி நேரம் படித்தேன். நான் கடினமாக உழைத்ததற்கு பயனாக இந்த மதிப்பெண்கள் எனக்கு கிடைத்துள்ளது. மேலும் நான் உயர்கல்வி படிக்க விரும்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முடிவுகள் வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இது ஒரு அதீத உணர்வு, மற்ற திருமணமான பெண்கள் தங்கள் கனவுகளைப் பின்பற்றுவதை ஒருபோதும் நிறுத்த வேண்டாம், உங்கள் கனவுகளைத் துரத்துவதை நிறுத்தாதீர்கள், அவற்றை நனவாக்க கடினமாக உழைக்கவும்,’ என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...