‘உதலு சவிய’:அரநாயக்கவில் உணவுப் பாதுகாப்பு செயற்திட்டம்!

Date:

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மற்றுமொரு நிகழ்ச்சி கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

‘உதலு சவிய’ எனும் இந்த நிகழ்ச்சித் திட்டமானது அரநாயக்க பிரதேச செயலாளர் இசட்.ஏ.எம்.பைஃப்சல் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எச்.கார்டன் ஆகியோரின் பூரண அனுசரணையுடன் இடம்பெற்றது.

மேலும், எஸ். நிஸ்ஸங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அடையாளம் காணப்பட்ட மூன்று கிராம உத்தியோக பிரிவு குடும்பங்களைச் சேர்ந்த 60 பயனாளர்களுக்கு விதைகள் மற்றும் சேதனப்பசளை விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ரம்யா லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் டீ.எம். அலி சப்ரி, கேகாலை மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் பந்துபால நாணயக்கார அப்பகுதி அரசாங்க அதிகாரிகள், கேகாலை மாவட்ட ரம்ய லங்கா இணைப்பாளர் வைத்தியர். எம்.ஐ.எம் அக்பர் அலி மற்றும் தேசிய சமாதான பேரவை உறுப்பினர்கள், ரம்ய லங்காவின் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...