ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: மற்றுமொரு இளம்பெண் கொலை!

Date:

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்கியதில் மேலும் ஒரு இளம்பெண் பலியாகியுள்ளார்.

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசார் தாக்கியதில் இளம்பெண் மஹ்சா அமினி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தாக்கியதில் மேலும் ஒரு இளம்பெண் பலியாகியுள்ளார். ஹதீஸ் நஜாபி என்ற இளம்பெண் கராஜியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளத் தயாரானபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஆறு முறை தோட்டாக்களால் துளைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் ஹதீஸ் நஜாபி, பாதுகாப்புப் படையினரால் கண்மூடித்தனமாக சுட்ட தோட்டாக்களால் மார்பு, முகம், கை மற்றும் கழுத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிசூட்டுக்கு பின் ஹதீஸ் நஜாபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஹதீஸ் நஜாபியின் மரணம் ஈரான் முழுவதும் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 1992...