அளுத்கடை மேல் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு வலயமாக நியமிப்பதற்கான தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் உரையாற்றிய நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி ரசிக சஞ்சீவ, 30 வருட யுத்த காலததில் கூட உயர் நீதிமன்ற வளாகம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படவில்லை.
இதன்போது கொழும்பின் சில பகுதிகளை அதியுயர் வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை போராட்டக்காரர்கள், இலங்கை அரசாங்கத்தின் அடக்கு முறைக்கும் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கும் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.